உதயமாகுமா இவர்களது வாழ்வு?

0 comments
கடந்த யுத்தத்தின் பின் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மக்கள் பல வருடங்களின் பின் தம் சொந்த நிலங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆந்த வகையில் 16வருடங்களின் பின் J/89 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த உதய புரத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசுக்கு இருக்கும் வேகம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இல்லை. கடற்றொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட இம் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். குடி தண்ணீர் வசதி இல்லாத நிலையில் “பவுசர்” தண்ணீரையே எதிர்பார்த்து இருக்கின்றனர்.சில வேளைகளில் பவுசர் வராத சந்தர்ப்பங்களும் நிலவுவதாக கூறினர்.



 இப்பிரதேசத்தில் 203 துண்டு காணிகள் காணப்படுகின்றன. இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக் கிராமத்தினுள் நுழைவதற்கு ஒற்றையடிப்பாதையே காணப்படுகின்றது. இரு மருங்கிலும் பற்றைகள் சூழந்துள்ள நிலையில்  பாதை முழுவதும் மணல் பரந்ததாக உளளது. இதனூடாக போக்குவரத்துச் செய்வதில் அப்பிரதேச மக்கள் பெரும் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதைக் காணமுடிகின்றது. மீளக்குடியேறிய தமக்கு 12தகரங்கள் மாத்திரமே தரப்பட்டதாகவும் யோகேஸ்வரி என்பவர் கூறினார். அது தவிர தமக்கு எவ்வித உதவியும் செய்து தரப்படவில்லை எனவும் கூறினார். மலசலகூட வசதியற்ற நிலையில் தாம்  பற்றைகளை மறைவுகளை நாடிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினர்.
 “தேர்தல் காலம் என்றதும் வந்து வாக்கறுதி தருவார்கள் , எம்மால் இயன்ற உதவிகளை செய்து தருவோம் என்று சொல்வார்கள்.பின்னர் தேர்தல் முடிவடைந்ததும் இந்தப் பக்கமே வரமாட்டினம்.” ஏன்று அக்கிராம மக்கள் அங்கலாய்த்தனர். கண்தெரியாத தன் 21 வயது மகனுடனும் தம் 4 பெண் பிள்ளைகளுடனும் உதயபுரத்தில் மீளக்குடியேறியுள்ள பரமேஸ்வரி என்பவர் கூறுகையில் “இங்கு வைத்தியசாலை வசதி இல்லை.இந்த நிலையிர் என்னுடைய முத்த பிள்ளை கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவரையும் இங்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றேன்.நள்ளிரவில் ஏதேனும் ஆபத்தென்றால் வைத்தியசாலைக்குச் செல்வதே பெரும் சிரமமாக உள்ளது எனக் கூறிக் கண்கலங்கினர்
மீளக் குடியேறிய மக்களுக்கான மீளமைப்பு நிதியாக 2500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இங்கு வசிக்கும் மக்களுக்கான அந்நிதி வழங்கப்படவில்லை. வீதி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் குடும்பத்தினருக்கு மட்டுமே இந்நிதி வழங்கப்படும் எனக் கூறியதாகவும் வேதனைப்பட்டனர்.
இவ்வாறு எந்தவித அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தம் வாழ்வைத் தொடரும் உதயபுரம் மக்களது வாழ்வில் உதயத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்;கை எடுத்து அவர்களது வாழ்விலும் உதயத்தை ஏற்படுத்த வேண்டும்.  

இப்படியும் வாழ்வா?

0 comments
நாம முன்னாடி குடிசை வீட்டில இருந்தப்போ இப்புடி இல்ல,இந்த கௌசிங்போர்ட் கட்டித்தந்தப்புறம் தான் இம்புட்டு நாஸ்தி”என்று கூறியபடி தோய்த்த ஆடைகளை கொடியிலே காயப்போட்டார் 70 வயது மதிக்கத்தக்க வயோதிப மாது கண்ணம்மா.அவர் கூறியது அவர்கள் இருக்கும் குடியிருப்பைச் சூழ இருக்கும் குப்பை நிறைந்த கால்வாயினையே. 
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நாம் ஆறு பேர் “Lock area”எனும் சேரிப்பகுதிக்கு சென்ற நாம் அம் மூதாட்டியுடன் பேசிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.அவ்விடத்திற்கு செல்ல முன்னர் அவ்விடம் பற்றிய தகவலை எம்மோடு வந்த  சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டோம்.அவர்கள் கூறிய விடயம் வியப்பைத் தந்தது.ஆனால் சென்ற பார்தபோது உண்மை புரிந்தது.எம் கண்ணில் பட்ட முதல் வீடே உண்மையை உணர்த்தியது. ஒரு புறம் அதிர்ச்சியும் மறுபுறம் மனதில் பல கேள்விகளும் என்னை ஆட்கொண்டது. அதிர்ச்சி என்ன தெரியுமா? வீட்டில் தொலைக்காட்சி அது மட்டுமா? குடிசையருகில் சலவையியந்திரம்.பழைய உக்கிய தகரஙகளால் வேயப்பட்;ட கூரையாலான வீடு அருகில் ஜீரணிக்க முடியாத நாற்றம் ஆனால் சாதாரண தர மக்களை விட வசதியாக வாழ்கின்றார்கள்.இன்னும் சொல்லப் போனால் ஆடம்பரமாக வாழ்கின்றார்கள் என்றே கூறலாம்.



மேலும் தொடர்ந்து சென்றோம்.தலையை சுற்றியது.நம்மையறியாமல் மூக்கை நோக்கி கை நகர்ந்தது.எவ்வளவு தான் மூச்சையடக்கிக் கொண்டாலும் அந்த நாற்றம் நுழையவே செய்தது.  “ஐயோ என்ன இது வயித்தப்பிரட்டுது எப்பிடி இதுக்க இருக்கினம்” என்றபடி எம்முடன் வந்த நண்பியொருத்தி வேகமாக அவ்விடத்தைக் கடந்தாள்.அடுக்கு மாடி வீடு,அதன் அண்மையில் கழிவு நீர் வாய்க்கால்,அவ் வாய்க்காலினுள் பொலித்தின் பை பிளாஸ்ரிக் மரக்கறி மாமிசக் கழிவுகள் என அனைத்துக் கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தன.இந்தக் கழிவு நீர் கால்வாயை புழுக்கள் தம் வாழ்விடங்களாக்கிக் கொண்டுள்ளன.அதில் உள்ள கழிவை விட புழுக்கள் தான் அதிகம். கொசுக்கள் ஒரு புறம் அவ்விடத்தைக் கடந்து சென்றபோது நான்கு பெண்கள் ஒன்றாக இவருந்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் நின்றவரில் ஒருவர் கர்ப்பிணி இந்நிலை பற்றி அவரிடம் மெதுவாக பேச்சைக் கொடுத்தோம “நாம எத்தனை வாட்டி போன்பண்ணி சொல்லிபுட்டம் இம்புட்டு நாளா வரவேயில்ல கிளீன்மான்சுக்கு சொல்லிருக்கும் வருவம் வருவம் என்றாங்க அப்புறம் வாறதேயில்ல புழு எல்லாம் வருது” என்று ஆவேசத்துடன் கூறினாரஅதே இடத்தில் இருந்த இன்னொரு பெண் இவ்வாறு கழிவுகள்  கொட்டப்பட்டு நீர் ஓடாமல் இருப்பதால மலசலகூடங்களில் அடைப்;புக்கள்  ஏற்படுவதாகவும் பின்னர் அதனை தம் செலவில் நிவர்த்தி செய்வதாகவும் அதற்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வதாகவும் கூறினார் இவர் பேசிக்கெண்டிருக்கும் போதே இன்னுமொரு பெண் இடையில் குறுக்கிட்டு “போன வரு~ம் சின்னக்கொழந்தைகள் எல்லாருக்கும் இந்த கொசுக்களால் வாந்திபேதி வந்திச்சுங்க அதுக்கப்புறமாவது ஏதாச்சும் பண்ணுறாங்களா பாருங்க என்று கூறினார் தொடர்ந்து சென்ற போது கலவாரி நகர் என்ற பகுதியை அடைந்தோம் .Lock area  வில் இருக்கும் கல்வாரி நகரில் இரண்டு பாடசாலைகள் இருந்தும் தற்போது ஒரு முன்பள்ளியே அங்கு இயங்கி வருவதைக் காணமுடிந்தது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சித்திட்டம் என்ற முன்பள்ளியில் இருபது குழந்தைகள் கல்வி கற்கின்றனர் அப் பிள்ளைகள் அனைவரும் அவ்விடத்தைச் சேர்ந்தவர்கள்
இத்தனை சிறுபிள்ளைகள் வசிக்கும் இவ்விடம் இந்த நிலையில் கழிவுகளுடனும் நாற்றத்துடனும் இருப்பதைப்பார்த்தால் அக் குழந்தைகள் பற்றி ஏதோ ஏதோஎண்ணத்தோன்றியது.



 விளையாடும் இக் குழந்தைகள் இவ்விடத்தில் எவ்வாறு மகிழ்வுடன் ஓடியாடி விளையாட முடியும்??? எல்லா வசதியுடனும் போதிய வருமானத்துடனும் இருக்கும் இவர்கள் ஏன் இப்பகுதியை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு செல்லவில்லை வாக்குக்காக மட்டும் தான் அரசாங்கம் பயனபடுத்துகிறதா???இவர்கள் வாழ்வைப்பற்றி யாரும் எண்ண மாட்டார்களா? ஏன மனதில் கேள்விகளை மாத்திரமே அடுக்கிக் கொள்ள முடிந்தது.304 குடிசைமாற்று வாரியத்தையும் 100குடிசைகளையும் கொண்ட டுழஉ யுசநய வும் 30 கல்நாரி வீட்டைக் கொண்ட கல்வாரி நகரும் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் நாற்றம் கலந்த காற்றைச் சுவாசிக்கப் போகின்றன.? நம்மோடு வந்த நண்பர்களுடன் இதுபற்றிக் கதைத்தவாறே சென்ற போது இன்னுமொருவரிடம் ஏதேட்சையாகப் பேச்சுக் கொடுத்தோம். “மேல்வுட்ல இருக்கிறவங்களிட்ட ரொம்பக் காலமாக சொல்லிப்புட்டம் அவங்க கேக்கிறதா இல்ல.கிளீன் பண்ண வாறவங்க மேலயும் குப்பைகளை போட்டிருக்கான்கண்ணா பாருங்களன்.கீழ் வுட்டில இருக்கிற நாங்க பாஸ்கற் வைச்சிருக்கம்.இதுக்கு கண்டிப்பா ஒரு வழி பண்ணணும்” என்று மிகவும் ஆத்திரத்துடன் கூறினார். “இதுமட்டுமில்லங்க நம்மகிட்ட ஒட்டுக் கேட்டு வாறவங்க கூட இந்த குப்பைக்கிள்ளையும் நாத்தத்துக்கு பக்கதாலையும் தான் நடந்து போறாங்க என்று கூறியபடிசிரித்தார். எல்லோரும் மனிதர்கள் தானே பின்பு எதற்கு ஒருவரைப்பற்றி மற்றுமொருவர் சிந்திக்கவே மாட்டோம் என்கிறார்கள்??? ஏன்னே மனிதரப்பா…..!!என்று சிந்தித்தபடியே சென்றபோஎன் சிந்தனையை “அம்மா…”என்ற குரல் சிதறடித்தது. திரும்பல் பார்த்தபோது காலை கால்வாயில் விட்டம் முகத்தை மறைத்துக் கொண்டு அலறினாள் நண்பியொருத்தி. ஏன்ன நடந்ததோ என்று அருகில் சென்று பார்த்த எனக்கு சிரிப்பு தாங்கிக் கொள்ள முடியவில்லை.மனதில் ஏறியிருந்த கனதி இறங்கி அடுத்த நொடியில் மீண்டும் ஏறிக் கொண்டது.கால் போனதுக்கு இப்படி அழுகிறாங்களே இவங்க எண்ணிக் கொண்டேன்.சென்றது வேறங்கும் இல்லை கூவா நதியைப் பார்வையிடுவதற்குத்தான். கடலில் சென்று கலக்கும் அந்நதியில் தான் இவர்கள் வீசும் கழிவுகளும் கலக்கின்றது.இந் நீரைத்தான் குளிப்பதற்குப் பயன்படுத்து கின்றார்கள் என்றும்அறிந்தோம்.



வசதியிருந்தும் வாழ வழியிருந்தும் எல்லோரும் மனிதர் தானே என்ற நினைப்பின்றி சுயநலத்துடன் செயற்படும் ஒரு சிலரால் பலர் பாதிக்கப்படுகின்றார்கள்.குப்பைகளை உரிய முறையில் அகற்றினால் உயிரைக் காத்துக் கொள்ளலாமே! இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்படுவது அனைவருமே. இதனைப் புரிந்து இவர்களும் இவர்களுக்கு மேல் உள்ளவர்களும் (அரசு) செயற்பட வேண்டும். உள்ளே ஏ.சி அறையில் உட்கார்ந்து சுவாசித்தாலும் வளியில் நாற்றம் கலந்த காற்றைத்தானே சுவாசிக்கின்றோம் என்ற உணர்வு ஏன் இவர்களுக்கில்லை.பொழுதைப் போக்க தொலைக் காட்சி இருக்கின்றது ஆனால் பொல்லாப்பு வரும் சூழலில் அல்லவா வசிக்கின்றார்கள்.ஆடம்பர வாழ்விற்குரிய அனைத்து வசதிகளுடனும் அசிங்கத்துள் வாழ்கின்றார்கள் இவர்கள்…

கலையை வென்ற நம் கலைஞர்

2 comments
கலையை வென்ற நம் கலைஞர் சிறீதர்
பிச்சையப்பா அவர்களை காலம் வென்றுவிட்டது என்று தான் கூறவேண்டும். 47 வருடங்கள் மாத்திரமே இவ்வுலகில் வாழ முடிந்த அவரால் படைக்கப்பட்ட படைப்புக்கள் ஏராளம். இலங்கையின் பிரபல நாடகக் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் 2010ஆம் ஆண்டு பெப்ரவரி இருபதாம் திகதி இக்கலையுலகை கவலையில் ஆழ்த்தி விட்டு சென்றவர். 1963 ஆம் ஆண்டு ஜீலை மாதம் இருபதாம் திகதி நாடறிந்த நாடகக் கலைஞரான டி.வி பிச்சையப்பாவிற்கு மகனாக உதித்தவர் தான்  சிறீதர் அவர்கள். கொழும்பு கதிரேசன் வீதியில் உள்ள இல்லத்தில் வாழ்ந்தவர். கொழும்பு விவேகானந்தர் கல்லூரியின் மாணவனும் கூட. சிறு வயது முதலே கலைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.ஆம் தனது ஒன்பது வயதிலேயே கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தொடங்கிவிட்டாராம் சிறீதர்
அவர்கள்.
 ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கொண்டவரோ என்று அதிசயிக்கும் அளவிற்கு தன்னை கலையால் கட்டிக் கெகாண்டவர். இவர் நாடகக் கலைஞர் மட்டுமன்றி சிறந்த பிண்ணணிப்பாடகர் ,பாடலாசிரயர், இயக்குனர, எழுத்தாளர், மிமக்கிரி மற்றும் ஓவியர் என பல்கலைத்துறையிலும் ஈடுபட்டு கரைலத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பல்கலைத் தென்றல் சிறீதர்
அவர்கள்.


ஆம் இத்தகைய கலைஞன் இன்று நம்மோடு இல்லை என்பது கவலைக்குரியதே. ஆவர் எம்மை விட்டுப் போனாலும் அவரது கலைப்படைப்புக்கள் எம்மோடு கதை பேசிக் கொண்டு தான் இருக்கின்றன.
சுpறந்த நாடகக் கலைஞரான சிறீதர்
அவர்கள் இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சி மூலம் சிறுவர் நாடகங்களில் பிரபல்யமானார்.பின்னர் பாடகராகக் கலையுலகினுள் பிரவேசித்தார். தொலைக்காட்சிகளில் ஐம்பதிற்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றார். 2002 ஆம் ஆண்டு சூரியன் எப்.எம் இல்  “பாபா பூம்பா” இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது மட்டுமன்றி சக்தி எப்.எம் இல் பாடிக்கேட்ட பாடல் என்ற நிகழச்சியை ஞானகி என்பவருடன் சேர்ந்து சுவாரஸ்யமாக வழங்கியிருந்தாராம்.
 இலங்கையின் ஈழத்தவர் கலையம்சத்தை தென்னிந்திய கலைத்துறையுடன் ஒப்பிடடுக் கூறுமளவிற்கு தொண்ணூறுகளில் தென்னிந்திய திரையுலகின் பிண்ணணியில் ஈழத்துப் பாடல்கள் பலவற்றை பாடியிருக்கின்றார்.
ஸ்ரீதர் அவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை மொழி பெயர்த்து வழங்கி வந்துள்ளார். சுpங்களத் தொலைக் காட்சி நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்து வழங்கியிருக்கின்றார். “உன்னைப் போல் ஒருவன்” என்ற நாடகத்தில் பங்கேற்று புகழைத் தேடிக் கொண்டவர். எஸ்..ராமதாஸ், எஸ். செல்வசேகரன், கே.ஏ ஜவகர் , ஜெய்ரகிம், சஹீட் , ராஜாகணேஸன், நடராஜா சிவம் , கே.எஸ் பாலச்சந்திரன் , கமலினி , ஜெயஜோதி , மணிமேகலை போன்ற பலரோடும் சிங்களக் கலைஞர்களுடனும் இணைந்து நடித்து பெருமை கண்டவர்.
 1974 கே. செல்வராஜ்ஜின் கதை வசனத்தில் உருவான “உறவுகள்”மேடை நாடகத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் உறவுகளை வளர்க்கத் தொடங்கினார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய்” என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் நாடக உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை சிறீதர்
பதித்துக் கொண்டார்.
 ரூபவாஹினி ஒளிபரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியான 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். “சமூகசேவகி”, “எதிர்பாராதது” போன்றவை அவர் நடித்த தொலைக்காட்சி நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை.
எஸ். ராமதாஸ் , மஹதி ஹசன் , இப்ராஹிம் போன்றோர் எழுதிய வானொலி பிரதிகளில் மிக அதிகமான நாடகங்களை நடித்துள்ளார். ஈழத்து நாடக உலகில் நடிகவேள் லடிஸ் வீரமணி என்ற கலைஞனது முடிவு எப்படி இருந்ததோ அதே நிலைக்கு சிறீதர்
 தள்ளப்பட்டது தவிர்க்க முடியாததொன்றாக அமைந்துவிட்டது.
ஸ்ரீதர் அவர்களிடம் காணப்பட்ட மற்றுமொரு படைப்பாற்றல் நவீன ஓவியங்கள் வரைவது. ஆம் இவரை நவீன ஓவியத்தின் முன்னோடி என்றே குறிப்பிடலாம். தினகரன் வாரமஞ்சரி சிறுகதைகள் , தொடர்கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்திருக்கின்றார். மல்லிகை போன்ற இலக்கிய ஏடுகளும் மித்திரன் வாரமலரின் கலாவனம் பகுதியும் ஸ்ரீதரின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. இவரின் ஓவியப்படைப்பக்கள் மட்டுமன்றி பல கலைப்படைப்புக்கள் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டப் படாமலேயே கடைசி வரை இருந்துவிட்டமை வேதனைக்குரியதே.
மேலும் “மாமியார் வீடு “ “ரத்தத்தின் ரத்தமே” திரைப்படம் தொட்டு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிற்கும் அவரது பங்களிப்புக்கள் இருந்துள்ளன.  சிறீதர்



அவர்கள் இறுதியாக பங்கெடுத்த வானொலி நாடகம் வந்தியதேவன் சரித்திரத் தொடர். சக்தி எப்.எம் வானொலி தயாரித்து வழங்கிய இத் தொடரில் தான்  சிறீதர்
அவர்கள் இறுதியாக பங்கெடுத்துள்ளார். சக்தி எப்.எம் இவர் நினைவாக நிகழ்ச்சியினையும் ஒலிபரப்பியிருற்தனர்.
புல நாடகங்களில் ரசிகர்களை சிர்க்கவைத்த இவர் தனது வாழ்வில் சிரித்து மகிழ்ந்தது குறைவென்று அறியமுடிந்தது.
சிறீதர்
அவர்கள் கவிஞனாகவும் பரிணமித்தள்ளார். தமிழுக்காகவும் தனக்காகவும் எதிர் காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு இறுவட்டு ஒரு தெரலைக்காட்சி நாடகம் தனது பெயரில் வெளியிட வேண்டும் என்பதே இவரது இறுதி ஆவலாக இருந்தது.
இத்தகைய கலைஞன் வெகு விரைவில் நம்மை விட்டு நீங்கி விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றும் ஸ்ரீதர் அவர்கள் எம் மத்தியில் இருந்திரந்தால் ஏhளமான படைப்புக்களை கொடுத்திருப்பார். இக்கலைஞன் எம்மை விட்டு நீங்கிய பின்பு தான் அவரது கலைப்படைப்பக்களின் பெறுமதியும் நம் கலைத்துறைக்கு தெரிய வந்துள்ளது.
கலைத்திறமைகளை கால்களாய்க் கொண்டு கலைத் தளத்தில் நடமாடி நின்று பலரை சிர்க்கவும் சிந்திக்கவும் வைத்து இலக்கிய இதயங்களையும் கலாரசிகர்களையும் கண்ணீக்குள் விட்டுச் சென்றாலும் கலைப்பணியைத் தலைப்பணியாய்க் கொண்டதன் மூலம் காலத்தால் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஸ்ரீதர்.
எம்மவர்கள்; பலர் பல்வேறு கலைத்திறமை மிக்கவர்களாhக நம் மத்தியில் இருந்துள்ளார்கள். இருக்கின்றனனர். இவர்களது படைப்பாற்றல் வெளியுலகிற்கு கொண்டு வரப்படவேண்டும். எத்தனை  ஊடகங்கள் இருந்தும் அவர்களது படைப்புக்கள் வெளிப்படுத்தப் படாமலே மழுங்கிப் போய் விடுகின்றன. இதற்கு சிறீதர்
பிச்சையப்பமடடும் விதி விலக்கல்ல.
சில ஊடகங்கள் தற்போது இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது பாராட்டுக்குரியதே. நம் நாட்டு  கலைஞர்களது முயற்சிக்கு ஊக்கமளித்து இவர்களது திறமைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். உயிரோடு இருக்கும் போதே கலைஞனது கலைப்படைப்புக்கள் பற்றி பேசி அவனது படைப்புக்களிற்கு ஊக்கமளிப்போம்;.
இப் பதிவினை மேற் கொள்ள உதவிய இணைய நண்பர்களிற்கும் மற்றையவர்களிற்கும் நன்றிகள்.  

“என்னத்த சொல்றது எல்லாம் போயிட்டுது....

0 comments
“என்னத்த சொல்றது எல்லாம் போயிட்டுது. எங்கட நிலம் முந்தி இப்படியா இருந்துது. எங்களுக்கு வந்த கேடு பிள்ளையல் இது. இந்த மண்ணில அந்தக் காலத்தில நாமள் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சுப்பாத்தா நெஞ்சு வெடிச்சுடும்” என்று தன் கவலையை வெளிப்படுத்தினார் துஃ222 கிரமசேவகர் பிரிவு கீரிமலை சேந்தாம் குளத்தில் மீளக்குடிN;யறியுள்ளவர்களின் ஒருவரான குடும்பஸ்த்தர் சௌந்தர் நாயகம். கடற்தொழில் செய்யும் இவருக்கு மூன்று பிள்ளைகள். வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து இளவாலை யொயிட்டியில் வசித்த இவர் தற்போது தன் சொந்த மண்ணில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மீளக் குடியேறியுள்ளார்.
பத்திரிகை ஒன்றின் சேந்தாங்குளம் மீள் குடியேற்றம் பற்றிய செய்தியை படித்தனான் அங்கும் செல்லவேண்டும் என்று தீர்மாணித்தோம். “தெல்லிப்பழையூடாக கீரிமலை”  என்று பெயர் இடப்பட்ட அரச சேவை பேரூந்தில் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பித்தது நம் பயணம். காங்கேசந்துறை வீதியூடாக கீரிமலை நோக்கிய பயணம் அன்று சற்று வித்தியாசமான பயணமாக அமைந்தது. ஏனனில் வழமையான எம் பயணத்தில் நாம் நான்கு பேர் பங்கபற்றுவோம் ஆனால் அன்றைய பயணத்தில் நாம் இருவர் தான் “என்ன துணிச்சலடா இவளவைக்கு சொல்லுக் கேட்காமல் போகுதுகள் சொன்னாலும் கேக்காலவையாம்” :என்ற ஏனைய நண்பர்களின் மறுப்பினை வாழ்த்தாக ஏற்றுக் கொண்டு சென்றோம். மக்கள் கூட்டத்தை பேரூந்தில் காணவில்லை செல்லும் வழியில் சில இடங்களில் போரின் வடுக்கள் தென்பட்டது. பற்றைகளுக்குள் இருந்து சில வீடுகள் எட்டிப்பர்த்தன. இருமருங்கையும் ஓரளவு அவதானித்தபடி சென்றோம். மாவட்ட புரத்தை அண்மித்ததும் பேரூந்தில் இருந்த அனைவரும் இறக்க ஆயத்தமானார்கள். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு உட்காந்திருந்தோம். ஆம் நம் இருவரைத்தவிர ஏனையவர்கள் இறங்கி விட்டார்கள். “பிள்ளையள் நீங்க எங்க போகனும்” என்ற ஓட்டுனரின் கேள்விக்கு நாம் பதில் கூற முன் “சேந்தாங் குளமாம்” என்றார் நடத்துனர். ஓட்டுனர் நம் இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு தனிய வெளிக்கிட்டிருக்கியல்” என்றார். பதில் கூறாமலையே இருந்தோம். நான்கு பேர் மட்டும்தான் பேரூந்தில். இதுவரை பெற்றுக்கொள்ளாத புதிய அனுபவம். ஆளரவமற்ற நீண்ட பாதைவழியே காற்றைக் கிழித்தவாறு சென்று கொண்டிருந்தது பேரூந்து. பேரூந்து தான் செல்லவேண்டிய இடத்திற்கு சுமார் பத்து நாற்பத்தைந்து மணியளவில் சென்று விட்டது. அவ்விடத்திற்கு சென்றதும் எங்கோ தென்னிலங்கையில் நிற்பது போல் உணந்தோம். ஆனால் நாம் நின்ற இடம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றல். “பிள்ளையல் அந்த வான் சேந்தாங்குளம் பக்கமாத்தான் போகுது. அதில போனா போகலாம்” என நடத்துனர் கூறிய பின்பே சுய நினைவுக்கு வந்தவர்களாக உணர்ந்தோம். மனதில் பெரும் சுமையொன்று ஏறியதாக தோன்றியது. அங்கு காணப்பட்ட வியாபார நிலையங்களும் தங்குமிடமும் வருகை தந்த சுற்றுலா பயணிகளையும் பார்த்தபோது ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது. எல்லாம் நம் விதி என நினைத்தவாறே சிற்றூர்தியில் ஏறினோம். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சற்றுத் தொலைவில் தான் சேந்தாங்குளம் கிராமம் அமைந்திருந்தது. சிற்றூர்தி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வளைவில் திரும்பிய போது எதிர்பாராத ஒரு அதிர்ச்சி. “தம்பொல பட்டுன” என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. அதை உணர்ந்து கொள்ள நீண்ட நேரம் எடுக்கவில்லை. கீரிமலை தீர்த்தத்தின் பெயர் சிங்கள நாமத்தில் பொறிக்கப்பட்டிருந்து. நீண்ட பெருமூச்சோடு பயணித்தோம். சேந்தாங்குளம் சந்தியில் சிற்றூர்தி நம்மை இறக்கியது. எவரையும் வீதியில் காணவில்லை.சுற்றும் மற்றும் பார்த்த போது அரை குறையாக அடைக்கப்பட்ட கிணறொன்றிற்கருகில் ஒருவர் நிற்பதைக்கண்டோம். மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி சென்றோம். நாம் சென்ற விசயத்தைக் கூற நாம் செல்ல வேண்டிய இடத்தின் குறிப்பைக் அவர் எமக்கு கூறினார். “கொஞ்சத்தூரம் போனா கடையொன்டு வரும் அதுக்கு பக்கத்து லேனால போங்க அங்கதான் நிறைய பேர் குடியேறி இருக்கினம்” என்றார்.நன்றியோடு விடைபெற்ற நாம் கடையில் இருந்தவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அங்கே தீபச்சந்திரன் என்னும் இளம் குடும்பஸ்தருடன் உரையாட முடிந்தது. “நாங்கள் ஆறு பேர் இந்த கொட்டில்லதான் இருக்கிறம். இருபத்தொரு வருஷத்துக்குப்பிறகு எங்கட இடத்திற்கு வந்திருக்கிறம். சின்னன்ல இந்த மண்ணில ஓடித்திருந்து விளையாடினதுதான் நினைவிருக்கு. அதுக்குப்பிறகு இங்க இருக்கிறதுக்கு பாக்கியம் கிடைக்கல. நாங்க குடியேறி இப்ப மூன்று மாதம்தான் ஆகுது. மலசலகூட வசதிகூட அல்ல அதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. அதால பொம்பிலப்பிள்ளையளுக்குதான் பெரிய சிரமம்” என்று தன் சிறிய வயது ஞாபகத்தையும் மீட்டியவாறு கூறினார். அவருடன் கதைத்து விட்டு அக்கடைக்கு முன்னால் இருந்த ஒற்றையடி பாதைவழியே நடந்தோம். வழிமுழுவதும் பற்றைகள்தான் காட்சி தந்தது. சிறிது தூரத்திற்கு குடிசைகள் எவற்றையும் காணவில்லை. தொடந்து நடந்த போது கையில் சிறிய பையுடன் ஒருவர் வந்தார். வழமைபோன்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். வந்த அந்த பெண் தன்னை ஜான்ஸ்ராணி என அறிமுகப்படுத்திக் கொண்டார். 2002ஆம் ஆண்டு வன்னியில் இருந்து இளவாளை சீந்திப்பந்தல் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் வசித்ததாகவும் இங்கு குடியேற அனுமதித்த பின் தம் குடும்பம் தான் முதலில் அங்கு வந்து குடியேறியதாகவும் கூறினார். “பத்தையை பிரித்து குகைக்குள்ள போறமாரித்தான் எங்கட காணிக்குள்ள போனம். கொஞ்சம் கொஞ்சமா பத்தைய வெட்டி காணியை துப்பரவாக்கி கொட்டில போட்டுக்கொண்டு இருக்கிறம்” என்றார். தற்காலிகமான வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டம் இருந்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனைப்பட்டார்.
92 குடும்பங்கள் வரை இங்கு வசிப்பதற்காக பதிவு செய்யப்பட்டிருந்தும் 30 குடும்பங்கள்’ வரையே இப்பகுதியில் தொடர்ந்தும் வசிக்கிறார்கள். இவர்களுக்கான குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியதாகவே உள்ளதாகவும் குளிப்பதற்கு நீண்ட தூரத்திலுள்ள பொதுக் கிணறுகளையே பாவிப்பதாகவும் கூறினார்.
ஜான்ஸ்ராணியுடன் கதைத்து விட்டு திரும்பிய போது கையில் பச்சிளம் பாலகனை ஏந்திய படி பெண் ஒருவர் வந்தார். அவரது பெயர் டிலக்ஷினி என்பதை தெரிந்து கொண்டோம் பருத்தித்துறை வியாபாரிமூலையில் முன்னர் வசித்ததாகக் கூறிய அவர் “நாங்க பிறந்தது இந்த மண்ணிலதான் ஆனா ஓடி விளையாட குடுத்து வைக்கல அப்ப போனதுக்கு பிறகு இப்பதான் இந்த மண்ணில கால் வைக்கிறன் தன் ஒன்பது மாத குழந்தையை காட்டியபடி இந்த பிஞ்சோட இங்க இருக்கிறதேண்டா யோசிச்சுபாருங்க ஒழுங்கான வீடு இல்ல எல்லாம் பத்தையும் பறுவுமா கிடக்கு என்ன செய்யிறது. தொழிலுக்காக வந்திட்டம். எங்கட இடம் விட்டுட்டாங்க என்டவுடன நாங்கள் முந்தியிருந்த இடத்தாக்கள் அங்க நாங்க நெடுக இருக்க சம்மதிக்கல அங்க தெமாழிலுக்கும் கஷ்ரம்” என கடற்தொழிலை நம்பி தன்னிடத்தை தேடிவந்த சோகத்தை கூறினார். சேநடதாங்குளம் கடல் அன்னையை நம்பியே அனேக குடும்பம் அங்கு வாழ்ந்து வருகின்றமையை காணமுடிந்தது.
தொடர்ந்தும் நடந்தோம். எதிரே  சற்றுப்பெரிய கொட்டகை ஒன்று தென்பட்டது. அங்கே சென்றோம். நான்கு சிறுவர்கள் பாயில் உட்காந்திருக்க அவர்கள் அருகில் பெண் ஒருவர் உட்காந்திருந்தார். அது ஒரு பாலர் பாடசாலை என்பதை ஊகிக்க முடிந்தது. நம்மை அறிமுகப்படுத்தியவாறு அவருடன் பேசினோம். அவர் தன்னை ஜெனிவா றொபின்சன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இக்கிராமத்தில் பாலர் பாடசாலை இல்லாத காரணத்தினால் தானே முன்வந்து அச்சிறுவர்களுக்கு இலவசமாக கற்பித்து வருவதாக கூறினார். இப் பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஒருமாதங்கலே ஆன நிலையில் பதினெட்டுப்பிள்ளைகள் பதிவு செய்திருந்தும் தற்போது ஏழு சிறுவர்களே கல்வி கற்றுவருவதாக கூறினார்.

சேந்தாங்குளம் கடற் தொழிலாளர் சங்கத்தினர் தம் அலுவலகப்பணிகளுக்காக அமைத்த கொட்டகையிலேயே பாலர் பாடசாலையை நடத்தி வருவதாக கூறினார். சுட்டிகளாக தம்மை மறந்து தமக்குள் ஏதோ பேசிச்சிரித்தவாறு இருந்தார்கள் அச்சிறுவர்கள். அச்சிசுவர்களுடனும் உரையாடிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தோம். கடற்கரையில் வலைகளைப்பிரிப்பவர்கள் ஒருபுறம் பிடித்த மீன்களை தரம் பிரிப்பவர்கள் மறுபுறம் என களைகட்டியிருந்தது. அழகிய அக்காட்சிகளை ரசித்தவாறு திரும்பியபோது. கடற்கரையோரமாக குடிசை ஒன்று தென்பட்டது. மூதாட்டியொருவர் அடுப்பருகில் உட்காந்திருந்தார். மலர்ந்த முகத்துடன் யார் என்றே அறியாத எம்மை “வாங்கோ நாச்சியார்” என்றார். அவருடன் கதைக்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தன் சொந்தப் பேரப்பிள்ளைகளை உபசரிப்பது போன்று எம்மை உபசரித்தார். அடுப்பிலே இருச்த கறியை வேகமுதல் இறக்கிவைத்தவாறு “என்ர பிள்ளைகளுக்கு ஒருமுடர் தேத்தண்ணி ஆத்தித்தந்தாத்தான் என்ரமனசு ஆறும்” என்றார் உரிமையுடன். இல்லையம்மா நாங்க இப்பதான் தண்ணிகுடிச்சம் என்று கூற எம் அருகில் வந்து உட்கார்ந்தபடி தன் கடந்த காலத்தை எம்மோடு பகிர்ந்தார். “என்ர ஐயாவோட வாழ்ந்த காலத்தில கொஞ்ச நஞ்ச மீனோ பிள்ளையல் பிடிச்சனாங்கள். இந்த முத்தத்தில சல்லியல பரவிற்ரு அதில மீனக்காயப்போட்டா அடுத்த நாள் கருவாடு. ஹீம்…….. இப்ப….” எனப் பெருமூச்செறிந்தார். “முத்தம் நிறைய முப்பத்தேழு தென்னம்பிள்ளையல் நின்டுது. வளவு தேங்காயால நிறைஞ்சிடும். இன்டைக்கு ஒரு தென்னம்பிள்ளை கூட இல்ல. எந்தப்பெரிய வீடு அது இருந்த இடத்தக்கூட கானேலயடி பிள்ளைகள். என்ர எட்டு பெட்டையளையம் இதுக்குள்ளதானே இராசாத்திகள் மாதிரி வளத்தன்” என்று கண்ணீர் சொரிந்தார். “இந்த தேசம் முழுக்க இடம் பேயர்ந்து திரிஞ்சு களைச்சுப்போனம். இனி எங்கேயும் போகேலாது. சாகுற நேரத்திலையாவது என்ர மண்ணில கடக்க முடியுதே அதுவே காணும். அந்த கடல் மாதாட மடில செத்திடனும் என்று வந்திட்டேன்” என்றார்.அமமூதாட்டி.                               
தன் வாழ்வின் இனிமையான பல பாகங்கள் இம் மண்ணில் கழிந்த வரலாற்றையும் தற்போது இருக்கும் நிலையையும் எண்ணி ஏங்கிய அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ள நம் மனது மறுத்தது. ஆனாலும் செல்லவேண்டிய கட்டாயத்துடன் விடைபெற்றம். “திரும்ப எப்ப இந்த கிழடப்பாக்க வருவியள். உங்கள பாத்துக்கொண்டு இருப்பன்” என்ற படி வழியனுப்பி வைத்தார்.
பற்றைகள் நடுவே சிறிய குடிசைகளில் வாழ்ந்தாலும் இருபத்தொரு வருடங்களின் பின் சேந்தாங்குளம் கடல் மாதாவிடம் மீண்டும் சரணடைந்த மகிழ்வை அங்கு மீளக்குடியேறியுள்ள அனைவரினது முகங்களிலும் பேச்சிலும் காணமுடிந்தாலும் தம் மண் முன்னர் இருந்த செழிப்பையும் அக்காலத்தில் தாம் வாழ்ந்த வாழ்வையும் நினைத்து ஏங்கும் ஏக்கம் அதைவிட அதிகமே. அன்றைய காலத்தில் அவர்கள் வாழ்ந்த அவ் வாழ்வை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் இவர்களது வாழ்வு பழைய நிலைக்கு திரும்பாதா??? என்ற ஏக்கத்துடன் நாமும் அவ்விடத்தில் இருந்து திரும்பினோம்.

நிறைய சொல்லிட்டம் நிறைவேற்றி வைப்பிங்களா?

0 comments
   தண்ணீருக்கு தாம்படும் பாட்டை கண்ணீரோடு சொன்னார்கள் தஃ14ஐ கிராம சேவகர் பிரிவாகக் கொண்ட வேலணை துறையுர் வாழ் மக்கள். “சாப்பாடு இல்லாமலும் இருக்கலாம் பிள்ளையல் தண்ணி இல்லாமல் எப்பிடி இருக்கிறது சொல்லுங்கோ…”என்றார் யோகேஸ்வரி என்பவர்.
         வேலணைப்பகுதியில் நிலவும் தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றி கேள்விப்பட்ட நாம் அங்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தோம். சக நண்பியின் உதவியுடன் வேலணை வங்களாவடி வரை சென்றோம். நாம் செல்ல வேண்டிய இடத்தையும் வந்த விடயத்தையும் நண்பியின் தந்தைக்கு கூறினோம்.அவர் நாம் செல்ல வேண்டிய இடத்தின் குறிப்பை கூறினார். வங்களாவடியில் இருந்து வேலணை துறையுர் கிராமத்தை நோக்கி கால் நடையாக தொடர்தது நம் பயணம்.நாற்பத்தைந்து நிமிடங்களில் துiயுரை அடைந்தோம். வழி முழுவதும் கண்ட தென்னைகள்  கோயில்கள் மனதிற்கு மகிழ்வைத்தர குதூகலமாகவே நடந்தோம். நமக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை அறியாத அப்பாவிகளாக விளையாட்டுத்தனமாகவே சென்றோம். செல்லும் வழியில் விற்கப்பட்ட மாங்காயைக் கண்ட நண்பி அதை வாங்கி ருசிக்க ஆசைப்பட நாமும் சேர்ந்தே ருசிக்க நேர்ந்தது. இடை வழியில் தண்ணீர்தாகமெடுத்தது. தண்ணீரைத்தேடி அலைபாய்ந்தன நம் கண்கள். அவ்வேளை வீதியோரமாக தண்ணீர்க்குழாய் கண்ணில் பட தண்ணீர் குடிக்கும் ஆவலில் ஓடிச்சென்று தண்ணீர்குழாயை திறந்த எமக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான். ஏக்கத்துடன் தண்ணீர்குழாயைப்பார்த்த எம்மை அருகில் இருந்த கடைக்காரர் அவதானித்துவிட்டார் போலும். “பிள்ளையல் பை;பில இப்ப தண்ணி வராது அது ஒரு மணிக்குத்தான் வரும்.இந்தாருங்கோ தண்ணி” விசனத்துடன் கூறியவாறு கருணையுடன் தண்ணீர் தந்தார். அமிர்தம் கிடைத்தது போன்ற சந்தோசத்துடன் நீரைப்பகிர்ந்து குடித்துவிட்டு நன்றியுடன் நடையைத்தொடர்தோம். குறும்புத்தனத்துடன் ஆரம்பித்த எம்பயணம் அச்சம்பவத்துடன் குமுறலுடன் தொடந்தது. துறையுர் முழுதும் நாம் சென்ற வழியில் கண்ட குழாய்களை சூழ தண்ணீரக்கலன்கள் நீருக்காக தவமிருந்தன. பன்னிரண்டுமணி உச்சி வெயில் நீரின் வலியுறுத்திக்கொண்டிருந்தது. கலன்கள் தனிமையில் தான் இருந்தன. அதனருகில் மக்கள் எவரையும் காணவில்லை. யாரோடு பேசுவதென்று சிந்தித்தபடியே சென்றபோது கண்ணெதிரே மற்றுமொரு கடையைக்கண்டோம். அங்கு சென்ற நாம் கடைக்கருகில் பேருந்திற்காக காத்திருந்த சறோஜா என்பவரிடம் மெதுவாகப்பேச்சைக் கொடுத்தோம். அவரிடமிருந்து வந்த முதல் கேள்வி “நீங்க யாரு”என்பது தான். அப்போது தான் புரிந்தது அவரது கருத்தை கேட்கும் ஆவலில் எம்மை அறிமுகப்படுத்த மறந்து விட்டோம் என்பது. அறிமுகத்தின் பின் தமக்குள்ள நீர்ப்பிரச்சினை பற்றி தயக்கமின்றி நம்மோடு பேசினார். “இது பிள்ளையல் துறையுர் நாலாம் வட்டாரம். நான் இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் தான் வன்னில இருந்து வந்தனான். இங்க தண்ணிக்கு செரியான கஸ்டம். ஒரு நாளைக்கு ஒருக்கா தான் பிள்ளையல் தண்ணி வரும். அதுவும் ஒரு மணித்தியாலம் தான்.எல்லாரும் ஒரே நேரத்தில எடுக்கவும் ஏலாது”என ஆதங்கமாகக் கூறினார்.
        அடிப்படைத்தேவை குடிநீர் .அது கிடைப்பதற்கு இந்நிலையா?எப்படி குடிநீர் இல்லாமல் இருப்பது. உயிர் வாழ முக்கியமானதே அது தானே! பசிக்கு உணவு கிடைக்காவிட்டால் தண்ணீரைக்குடித்து வயிற்றப்பசியை ஆற்றிக் கொள்ளும் கதையைக்கூட கேட்டிருக்கின்றோம். அவ்வாறிருக்க இங்கு நீர் கிடைப்பதே சிரமமாக உள்ளதை காணம் போது தான் இவர்கள் படும் துன்பம் வார்த்தையில் கூற முடியாதென்பதை உணர முடிகின்றது.அரட்டை அடித்தபடி சென்ற எமக்கு சறோஜா அவர்கள் தம் நிலை பற்றி கூறியதைக் கேட்ட பின் அடுத்த வார்தை வர மறுத்தது. மௌனமாகவே தொடர்ந்தது நம் நடை. நடந்த தூரம் முழுவதும் நாம் கண்ட குழாய்கள் எதுவுமே வெறுமனே இருக்கவில்லை. தண்ணீருக்காக ஏங்கும் கலன்களின் நடுவே தான் இருந்தது.


 நடந்தவாறே கிராமத்தில் இறுதியாக குழாய் அமைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்றுவிடடோம். நேரம் ஒரு மணியை அண்மித்துக் கொண்டி ருந்தது. நீர் வரும் நேரம் நெருங்கியதால் கைகளில் குடங்களையும் பெரல் களையும் தாங்கியபடி பெண்கள் அநேகர் வந்தனர். குழாய்க்கருகில் வந்த குணவதி என்பவர் நம்மை பார்த்து சிரித்தவாறு “என்ன பிள்ளையல் பார்கிறீங்க இது தான் எங்கட நிலமை. இண்டைக்கு தண்ணி எடுத்தா நாளைக்கு எடுக்க முடியாது.   நாளைக்கு வேற கொஞ்சப்பேர் எடுப்பினம்”என்றார். எதுவுமே புரியாதவர்களாய் மீண்டும் வினாவினோம். அப்போதுதான் எல்லாம் புரிந்தது. ஒரு குழாயில் முப்பது குடும்பங்கள் தான் நீர் பெற முடியும். ஆனால் ஒரே நாளில் முப்பது குடும்பங்களும் நீரைப்பெற்றுக் கொள்ள முடியாத நிலை. ஒரு மணிநேரம் மாத்திரம் நீர் விநியோகிக்கப்படுவதால் பதினைந்து குடும்பங்கள் இன்று நீரைப்பெற்றுக் கொண்டால் அடுத்த பதினைந்து குடும்பங்களும் அடுத்த நாளே பெறமுடியும் என்ற கட்டுப்பாடு. சில வேளைகளில் பன்னிரண்டு குடும்பங்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக அமைந்து விடும். அவ்வாறான சந்தர்பங்களில் சற்றுத் தொலைவிலுள்ள சாட்டிக்குச் சென்று அங்கிருந்து நீரைப்பெற வேண்டிய துயரமும் நேர்ந்திருக்கிறது. இவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் இரண்டு கலன்களை வைத்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது.களைத்துப்போய் இருக்கின்றார் என்பதை அவரது வருகை உணர்த்தியது. வந்தவர் ஒரு பெண்மணி.துவிச்சக்கரவண்டியில் இருந்து கலன்களை எடுத்தபடி “ஏன்டியக்கா அடுத்ததா நான் எடுக்கிறனே பிள்ளையல் பள்ளிக்கூடத்தால வந்திடப்போகுதுகள்”என்றபடி குழாய் அருகில் சென்று கலனை வைத்துவிட்டு எம்மை தோக்கினார். அவருடன் கதைத்தோம். “இன்டைக்கு எடுக்கிற தண்ணிய நாளன்டைக்கு வரை வைச்சிருக்கனும். சுpன்னஞ் சிறுசுகளோட சமாளிக்கிறதென்டா எப்பிடி சொல்லுங்கோ பார்ப்பம். குளிக்கிறதுக்கு கிணத்து தண்ணி உப்பெண்டாலும் சமாளிக்கலாம். குடிக்கிறதென்டா என்ன செய்யிறது. மாதம் மாதம் முப்பது ரூபா மட்டில வரி கட்டிறம்.எப்பதான் இந்த தண்ணி பஞ்சம் தீரப்போகுதோ”என்று அங்கலாய்த்தார்.தண்ணீர் குழாய் மூலம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் வாகனங்களில் நகர சபையினரால் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் முதல் நாள் அறிவித்தால் அடுத்த நாளே வானம் வரும் எனவும் கூறினர். இக்கிராமத்தில் வாழும் வசதி படைத்த சில குடும்பத்தினர் சொந்தமாக தம் வீட்டில் குழாய்களை அமைத்து தண்ணீரைப் பெற்று கொள்வதுடன் தண்ணீர்த்தாங்கிகளில் நீரை சேம்த்து வைத்தும் உள்ளனர். நீர் கிடைக்காது தவிக்கும் குடும்பங்கள் இவர்களிடம் பணத்தைக் கொடுத்து நீரைப் பெற்றுக் கௌ;வதாகவும் குறிப்பிட்டனர்.
 இவ்வாறு இவர்களுடன் கதைத்தபடியே வந்த வழியே திரும்பி வந்தபோது சிறு பையன் ஒருவன் தன்னைவிட உயரிய கலனுடன் வருவதைக் காணமுடிந்தது. மனதை உருக்கும் அக் காட்சியைக் கண்டு நீண்ட மூச்சோடு நடந்தோம். பெண்களும் சிறுவர்களும் தத்தம் கலன்களில் நீரை நிரப்ப முண்டியடித்தனர். மேலும் நடந்து சென்ற போது உச்சி வெயிலில் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தண்ணீர்க்கலனுடன் தள்ளாடியபடி வந்தார். அவரோடும் கதைக்க முடிந்தது. தனது பெயர் செல்லப்பா பழனி எனத் தன்னை அறிமுகப்படுத்தியவாறு எம்மோடு பேசினார். வயதுபோன நிலையில் தூர இடம் வந்து தண்ணீர் எடுக்க முடியாததால் தங்கள் வீட்டுக்குத் தனியான குழாய் அமைத்துத்தரும்படி கேட்டபோதும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். தனியான குழாய் அமைத்துத் தரக்கூடாதா என வேதனையுடன் கூறினார். அருகில் நின்ற மற்றுமொருவர் கூறியபோது “சமையலையும் விட்டிட்டு தண்ணியெடுக்க இங்க காவல் நிற்கிறம், இந்த தண்ணிலதான் சமைக்கவும் வேணும், குடிக்கவும் வேணும். ஓவ்வொரு நாளும் தண்ணி எடுக்கவும் ஏலாது. இன்டைக்கு எடுத்தா இனி நாளன்டைக்கு தான் நாங்க தண்ணி எடுக்கலாம்” என்று தன் பங்கிற்கு தனது துன்ப நிலையை எம்மோடு பகிர்ந்து கொண்டார். நீரை நிரப்பி வைத்துவிட்டு வெயில் சாய வந்து வீட்டிற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இதனால் சில சந்தர்ப்பங்களில் தண்ணீர்க் கலன்கள் கனவாடப்படும் துர்ப்பாக்கிய நிலை இருப்பதாகவும் கூறி வேதனைப்பட்டனர். குழாய்த்திருத்த வேலை செய்யும் சந்தர்ப்பங்களில் நகரசபையினரால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தனியார் வாகனங்கனில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தனியாரால் விநியோகிக்கப்படும் நீருக்கு ஒரு குடத்திற்கு  இருபது ரூபா செலுத்தியே பெறவேண்டும் எனவும் வேதனைப்பட்டனர்.
 




துறையூர் கந்தன் கடவைக்கு முன்னால் இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வீதியில் இருபத்தைந்து குடும்பங்களுக்க மேல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருக்கும் அப்பகுதியில் குழாய் எதுவும் அமைக்கப்படாத நிலையில் அங்குவாழும் மக்களும் தண்ணீரைப்பெற நீண்டதூரம் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. இது பற்றி யேசுதாசன் யேசுகமலன் என்பவருடன் கதைத்த போது “2002ஆம் ஆண்டே எழுத்க் கொடுத்தம் எங்கட பக்கத்துக்கு தண்ணிப்பைப்  தாங்க எண்டு. இன்னும் தாறமாறியில்ல . சின்னப்பிள்ளையல தனிய விட்டுட்டு அவவால வரயேலாது அதால வேலைக்கு போட்டு சாப்பிட வந்த நேரத்தில தண்ணி எடுக்க வந்தனான். எடுத்து இதில வச்சிட்டு வேலைக்கு போயிற்று பின்னேரம் வார நேரம்தான் வீட்டுக்கு கொண்டு போகனும்” என்று தன் குடும்பம் நீருக்குப்படுப் கஷ்ரத்தை எம்மோடு பகிர்ந்தார். “குளிக்குறதுக்கு நாங்க பெரியாக்கள் உப்புத் தண்ணிய பாவிப்பம் குழந்தைகளுக்கு எப்படி அதில கழுவுறது? தோல் வருத்தம் தான் வரும். அதால குடிக்க எடுக்கிற தண்ணீலதான் சின்னனுகள குளிக்கவாக்குறது. இந்த நிலைமையில எப்பிடி இந்த இரண்டு பெரல் தண்ணீய இரண்டு நாளைக்கு பாவிக்கிறது” என்று தொடர்ந்தார்.
 ஓவ்வொரு நாளும் ஒரு நேரமாவது இந்த குடிநீர் தமக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என விழிகள் குளமாக கூறினர். இருபத்து நான்கு மணிநேரம் நீர் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் எல்லா மக்களுக்கும் நீர் கிடைத்தால மட்டும் போதும் என்றனர். “வெயிலில் மொட்டாக்கு போட்ட படி தண்ணீருக்குத் தவம் இருக்கிறம் பாருங்கோ” என்றார் அங்கே நின்ற மற்றும் ஒருவர்.
 எத்தனையோ அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்பப்பட்டுவரும் இன்றைய நிலையில் குடிநீருக்காக போராட்டம் நடாத்திவரும் இம் மக்களது குடிநீர் பிரச்சனை என்றுதான் தீருமோ? ஏம் கண்முன்னேயே அவர்கள் தண்ணீருக்காக உச்சி  வெயிலில் உட்காந்திருந்த கொடுமையை காணமுடிந்தது. “தண்ணீ இல்லாம எப்படிப் பிள்ளையல் இருக்கிறது உங்களிட்ட நிறைய சொல்லிட்டம் நிறைவேற்றி வைப்பீங்களா….?” என்று எதிர்பார்ப்புடன் எம்மை நோக்கினர். நிறையுமா….? நிறைவேறுமா…,?

முனியப்பர் வீதியூடான பயணத்தின் போதான பதிவுகள்........

6 comments
காலை வகுப்புக்கு வந்ததும் புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டுக்காக வெளியே செல்ல வேண்டி ஏற்பட்டது .  அதற்காக முனியப்பர் கோவிலை தெரிவு செய்த நாம்  யாழ்பாணம் முனியப்பர் வீதியின்  ஊடாக கோட்டைக்கு செல்லும் எண்ணத்தோடு பயணித்த போது 


அழகாக  பூத்திருந்த தாமரைகள்  நிறைந்த புல்லுக்குளம்  என் கண்ணில் பட அதனை கமராவில் பதித்து விட்டு  திரும்பிய போது
 யாரென்றே தெரியாத ஒருவரின் சிலை மிக மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்பட்டது .அச் சிலை என் காமராவிட்குள்ளும் அகப்பட்டுக்கொண்டது.அச் சிலையின் தலை கூட இல்லை  .
இதனால் அவர் யார் என்று அறிய முடியவில்லை .
நாம் படம் எடுப்பதை அவதானித்த ஒருவர் அச்சிலை தந்தை செல்வாவினுடையது என விளக்கமளித்தார் .
                                          

 அப் புகைப்படத்துடன் திரும்பியபோது 

 வானைத்தொடும் அளவிற்கு காட்சி தந்த வீரசிங்கம் மண்டபமும் கமராவில் பதிந்தது. அக் கட்டடத்தின் முன்னால் காணப்பட்ட சதுக்கமும் என் கமராவில் அகப்பட மறக்கவில்லை.அவ்வாறே ஆங்காங்கே காணப்பட்ட பனை வடலிகளும் அதற்கிடையில் தோன்றிய காட்சிகளும் கமராவில் பதிந்தது.
                             

முனியப்பர் கோவிலில் கால் பதித்த வேளை கம்பி வலைகளுக்கிடையில் தெரிந்த துரையப்பா விளையாட்டரங்கும் பதியப்படது. 

ஆர்வத்துடன் படம் பிடித்துக்கொண்டிருந்த என் நண்பி திடீரென அலறினாள். என்ன நடந்ததோ என அருகில் சென்று பார்த்த போது அவள் பள்ளத்துள் வீழ்ந்ததால் அவளது  பாதணி அறுந்தமை தெரிந்தது .அருகில் அங்காடி இருந்ததனால்   உடனே புதியபாதணி வாங்கிகொள்ளமுடிந்தது .
கடையில் அழகாக அடுக்கப்பட்டிருந்த
பாதணிகளும் அறுந்த பாதணியும்    என் கமராவுக்குள் அழகாக சிக்கி கொண்டது. கோட்டை நோக்கி சென்று  அங்கு நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகளையும் அகழியையும் படமாக்கினேன்.  வரும் வழியில் கண்ட அச் சிலை இருந்த நிலை ஆயிரம் கதை சொல்லும் போது கோட்டையில் இடம்பெறும் புனரமைப்பு எனக்கு பெரிதாக தெரியாததால் கோட்டையில் ஒரு சில படங்களை மாத்திரம்    

எடுத்து  திரும்பினேன் .

Nanook of the north..................

2 comments



இத்திரைப்படம் இக்ளு என்கிற பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இன மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுகிறது. அவர்களினுடைய நாளாந் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழங்கள் வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
படத்தில் பேச்சுக்கள் இன்றி வெறும் சைகைகளே மடடுமே காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளன.

நாநோக் என்பவருடைய குடும்பம் உணவினைத் தேடி பனிப்பாறைகளினூடாக ஒரு கடற்கரையை நோக்கிச் செல்கின்றது. அவர்கள் பனிப்பறைகளினூடாகச்  செல்வதற்கு பாதுகாப்பாக நாய் உதவுகின்றது. இவர்கள் உணவினைத்தேடி பல இடங்கள் அலைகிறார்கள்.
கடலில் இருந்து பெறப்பட்ட மீன்களையும், பனிக்கரடிகளையும், கீரிகளையும் உணவாக உட்கொண்டனர் பனிக்கட்டிகளை நெருப்பினால் உருக்கி நீராகவும் பருகுகிறார்கள். தம் உணவினை பச்சையாகவே உண்ணுகின்றனர். இன்றைக்கும் இப்படியான மனிதர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
 சில சமயங்களில் நாய்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுகின்றது இதனை தனித்து நின்று சமாளிப்பவனாகவும் தனது குடும்பத்தை தனித்துநின்று காப்பாற்றுபவனாகவும் நானோக் இருக்கிறான்  காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவுத்தட்டு;ப்பாட்டினால் ஏற்படும் ஒரு சீனக்குடிமக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றது.