உதயமாகுமா இவர்களது வாழ்வு?

0 comments
கடந்த யுத்தத்தின் பின் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மக்கள் பல வருடங்களின் பின் தம் சொந்த நிலங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆந்த வகையில் 16வருடங்களின் பின் J/89 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த உதய புரத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசுக்கு இருக்கும் வேகம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இல்லை. கடற்றொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட இம் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். குடி தண்ணீர் வசதி இல்லாத நிலையில் “பவுசர்” தண்ணீரையே எதிர்பார்த்து இருக்கின்றனர்.சில வேளைகளில் பவுசர் வராத சந்தர்ப்பங்களும் நிலவுவதாக கூறினர்.



 இப்பிரதேசத்தில் 203 துண்டு காணிகள் காணப்படுகின்றன. இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக் கிராமத்தினுள் நுழைவதற்கு ஒற்றையடிப்பாதையே காணப்படுகின்றது. இரு மருங்கிலும் பற்றைகள் சூழந்துள்ள நிலையில்  பாதை முழுவதும் மணல் பரந்ததாக உளளது. இதனூடாக போக்குவரத்துச் செய்வதில் அப்பிரதேச மக்கள் பெரும் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதைக் காணமுடிகின்றது. மீளக்குடியேறிய தமக்கு 12தகரங்கள் மாத்திரமே தரப்பட்டதாகவும் யோகேஸ்வரி என்பவர் கூறினார். அது தவிர தமக்கு எவ்வித உதவியும் செய்து தரப்படவில்லை எனவும் கூறினார். மலசலகூட வசதியற்ற நிலையில் தாம்  பற்றைகளை மறைவுகளை நாடிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினர்.
 “தேர்தல் காலம் என்றதும் வந்து வாக்கறுதி தருவார்கள் , எம்மால் இயன்ற உதவிகளை செய்து தருவோம் என்று சொல்வார்கள்.பின்னர் தேர்தல் முடிவடைந்ததும் இந்தப் பக்கமே வரமாட்டினம்.” ஏன்று அக்கிராம மக்கள் அங்கலாய்த்தனர். கண்தெரியாத தன் 21 வயது மகனுடனும் தம் 4 பெண் பிள்ளைகளுடனும் உதயபுரத்தில் மீளக்குடியேறியுள்ள பரமேஸ்வரி என்பவர் கூறுகையில் “இங்கு வைத்தியசாலை வசதி இல்லை.இந்த நிலையிர் என்னுடைய முத்த பிள்ளை கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவரையும் இங்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றேன்.நள்ளிரவில் ஏதேனும் ஆபத்தென்றால் வைத்தியசாலைக்குச் செல்வதே பெரும் சிரமமாக உள்ளது எனக் கூறிக் கண்கலங்கினர்
மீளக் குடியேறிய மக்களுக்கான மீளமைப்பு நிதியாக 2500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இங்கு வசிக்கும் மக்களுக்கான அந்நிதி வழங்கப்படவில்லை. வீதி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் குடும்பத்தினருக்கு மட்டுமே இந்நிதி வழங்கப்படும் எனக் கூறியதாகவும் வேதனைப்பட்டனர்.
இவ்வாறு எந்தவித அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தம் வாழ்வைத் தொடரும் உதயபுரம் மக்களது வாழ்வில் உதயத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்;கை எடுத்து அவர்களது வாழ்விலும் உதயத்தை ஏற்படுத்த வேண்டும்.  

இப்படியும் வாழ்வா?

0 comments
நாம முன்னாடி குடிசை வீட்டில இருந்தப்போ இப்புடி இல்ல,இந்த கௌசிங்போர்ட் கட்டித்தந்தப்புறம் தான் இம்புட்டு நாஸ்தி”என்று கூறியபடி தோய்த்த ஆடைகளை கொடியிலே காயப்போட்டார் 70 வயது மதிக்கத்தக்க வயோதிப மாது கண்ணம்மா.அவர் கூறியது அவர்கள் இருக்கும் குடியிருப்பைச் சூழ இருக்கும் குப்பை நிறைந்த கால்வாயினையே. 
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நாம் ஆறு பேர் “Lock area”எனும் சேரிப்பகுதிக்கு சென்ற நாம் அம் மூதாட்டியுடன் பேசிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.அவ்விடத்திற்கு செல்ல முன்னர் அவ்விடம் பற்றிய தகவலை எம்மோடு வந்த  சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டோம்.அவர்கள் கூறிய விடயம் வியப்பைத் தந்தது.ஆனால் சென்ற பார்தபோது உண்மை புரிந்தது.எம் கண்ணில் பட்ட முதல் வீடே உண்மையை உணர்த்தியது. ஒரு புறம் அதிர்ச்சியும் மறுபுறம் மனதில் பல கேள்விகளும் என்னை ஆட்கொண்டது. அதிர்ச்சி என்ன தெரியுமா? வீட்டில் தொலைக்காட்சி அது மட்டுமா? குடிசையருகில் சலவையியந்திரம்.பழைய உக்கிய தகரஙகளால் வேயப்பட்;ட கூரையாலான வீடு அருகில் ஜீரணிக்க முடியாத நாற்றம் ஆனால் சாதாரண தர மக்களை விட வசதியாக வாழ்கின்றார்கள்.இன்னும் சொல்லப் போனால் ஆடம்பரமாக வாழ்கின்றார்கள் என்றே கூறலாம்.



மேலும் தொடர்ந்து சென்றோம்.தலையை சுற்றியது.நம்மையறியாமல் மூக்கை நோக்கி கை நகர்ந்தது.எவ்வளவு தான் மூச்சையடக்கிக் கொண்டாலும் அந்த நாற்றம் நுழையவே செய்தது.  “ஐயோ என்ன இது வயித்தப்பிரட்டுது எப்பிடி இதுக்க இருக்கினம்” என்றபடி எம்முடன் வந்த நண்பியொருத்தி வேகமாக அவ்விடத்தைக் கடந்தாள்.அடுக்கு மாடி வீடு,அதன் அண்மையில் கழிவு நீர் வாய்க்கால்,அவ் வாய்க்காலினுள் பொலித்தின் பை பிளாஸ்ரிக் மரக்கறி மாமிசக் கழிவுகள் என அனைத்துக் கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தன.இந்தக் கழிவு நீர் கால்வாயை புழுக்கள் தம் வாழ்விடங்களாக்கிக் கொண்டுள்ளன.அதில் உள்ள கழிவை விட புழுக்கள் தான் அதிகம். கொசுக்கள் ஒரு புறம் அவ்விடத்தைக் கடந்து சென்றபோது நான்கு பெண்கள் ஒன்றாக இவருந்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் நின்றவரில் ஒருவர் கர்ப்பிணி இந்நிலை பற்றி அவரிடம் மெதுவாக பேச்சைக் கொடுத்தோம “நாம எத்தனை வாட்டி போன்பண்ணி சொல்லிபுட்டம் இம்புட்டு நாளா வரவேயில்ல கிளீன்மான்சுக்கு சொல்லிருக்கும் வருவம் வருவம் என்றாங்க அப்புறம் வாறதேயில்ல புழு எல்லாம் வருது” என்று ஆவேசத்துடன் கூறினாரஅதே இடத்தில் இருந்த இன்னொரு பெண் இவ்வாறு கழிவுகள்  கொட்டப்பட்டு நீர் ஓடாமல் இருப்பதால மலசலகூடங்களில் அடைப்;புக்கள்  ஏற்படுவதாகவும் பின்னர் அதனை தம் செலவில் நிவர்த்தி செய்வதாகவும் அதற்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வதாகவும் கூறினார் இவர் பேசிக்கெண்டிருக்கும் போதே இன்னுமொரு பெண் இடையில் குறுக்கிட்டு “போன வரு~ம் சின்னக்கொழந்தைகள் எல்லாருக்கும் இந்த கொசுக்களால் வாந்திபேதி வந்திச்சுங்க அதுக்கப்புறமாவது ஏதாச்சும் பண்ணுறாங்களா பாருங்க என்று கூறினார் தொடர்ந்து சென்ற போது கலவாரி நகர் என்ற பகுதியை அடைந்தோம் .Lock area  வில் இருக்கும் கல்வாரி நகரில் இரண்டு பாடசாலைகள் இருந்தும் தற்போது ஒரு முன்பள்ளியே அங்கு இயங்கி வருவதைக் காணமுடிந்தது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சித்திட்டம் என்ற முன்பள்ளியில் இருபது குழந்தைகள் கல்வி கற்கின்றனர் அப் பிள்ளைகள் அனைவரும் அவ்விடத்தைச் சேர்ந்தவர்கள்
இத்தனை சிறுபிள்ளைகள் வசிக்கும் இவ்விடம் இந்த நிலையில் கழிவுகளுடனும் நாற்றத்துடனும் இருப்பதைப்பார்த்தால் அக் குழந்தைகள் பற்றி ஏதோ ஏதோஎண்ணத்தோன்றியது.



 விளையாடும் இக் குழந்தைகள் இவ்விடத்தில் எவ்வாறு மகிழ்வுடன் ஓடியாடி விளையாட முடியும்??? எல்லா வசதியுடனும் போதிய வருமானத்துடனும் இருக்கும் இவர்கள் ஏன் இப்பகுதியை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு செல்லவில்லை வாக்குக்காக மட்டும் தான் அரசாங்கம் பயனபடுத்துகிறதா???இவர்கள் வாழ்வைப்பற்றி யாரும் எண்ண மாட்டார்களா? ஏன மனதில் கேள்விகளை மாத்திரமே அடுக்கிக் கொள்ள முடிந்தது.304 குடிசைமாற்று வாரியத்தையும் 100குடிசைகளையும் கொண்ட டுழஉ யுசநய வும் 30 கல்நாரி வீட்டைக் கொண்ட கல்வாரி நகரும் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் நாற்றம் கலந்த காற்றைச் சுவாசிக்கப் போகின்றன.? நம்மோடு வந்த நண்பர்களுடன் இதுபற்றிக் கதைத்தவாறே சென்ற போது இன்னுமொருவரிடம் ஏதேட்சையாகப் பேச்சுக் கொடுத்தோம். “மேல்வுட்ல இருக்கிறவங்களிட்ட ரொம்பக் காலமாக சொல்லிப்புட்டம் அவங்க கேக்கிறதா இல்ல.கிளீன் பண்ண வாறவங்க மேலயும் குப்பைகளை போட்டிருக்கான்கண்ணா பாருங்களன்.கீழ் வுட்டில இருக்கிற நாங்க பாஸ்கற் வைச்சிருக்கம்.இதுக்கு கண்டிப்பா ஒரு வழி பண்ணணும்” என்று மிகவும் ஆத்திரத்துடன் கூறினார். “இதுமட்டுமில்லங்க நம்மகிட்ட ஒட்டுக் கேட்டு வாறவங்க கூட இந்த குப்பைக்கிள்ளையும் நாத்தத்துக்கு பக்கதாலையும் தான் நடந்து போறாங்க என்று கூறியபடிசிரித்தார். எல்லோரும் மனிதர்கள் தானே பின்பு எதற்கு ஒருவரைப்பற்றி மற்றுமொருவர் சிந்திக்கவே மாட்டோம் என்கிறார்கள்??? ஏன்னே மனிதரப்பா…..!!என்று சிந்தித்தபடியே சென்றபோஎன் சிந்தனையை “அம்மா…”என்ற குரல் சிதறடித்தது. திரும்பல் பார்த்தபோது காலை கால்வாயில் விட்டம் முகத்தை மறைத்துக் கொண்டு அலறினாள் நண்பியொருத்தி. ஏன்ன நடந்ததோ என்று அருகில் சென்று பார்த்த எனக்கு சிரிப்பு தாங்கிக் கொள்ள முடியவில்லை.மனதில் ஏறியிருந்த கனதி இறங்கி அடுத்த நொடியில் மீண்டும் ஏறிக் கொண்டது.கால் போனதுக்கு இப்படி அழுகிறாங்களே இவங்க எண்ணிக் கொண்டேன்.சென்றது வேறங்கும் இல்லை கூவா நதியைப் பார்வையிடுவதற்குத்தான். கடலில் சென்று கலக்கும் அந்நதியில் தான் இவர்கள் வீசும் கழிவுகளும் கலக்கின்றது.இந் நீரைத்தான் குளிப்பதற்குப் பயன்படுத்து கின்றார்கள் என்றும்அறிந்தோம்.



வசதியிருந்தும் வாழ வழியிருந்தும் எல்லோரும் மனிதர் தானே என்ற நினைப்பின்றி சுயநலத்துடன் செயற்படும் ஒரு சிலரால் பலர் பாதிக்கப்படுகின்றார்கள்.குப்பைகளை உரிய முறையில் அகற்றினால் உயிரைக் காத்துக் கொள்ளலாமே! இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்படுவது அனைவருமே. இதனைப் புரிந்து இவர்களும் இவர்களுக்கு மேல் உள்ளவர்களும் (அரசு) செயற்பட வேண்டும். உள்ளே ஏ.சி அறையில் உட்கார்ந்து சுவாசித்தாலும் வளியில் நாற்றம் கலந்த காற்றைத்தானே சுவாசிக்கின்றோம் என்ற உணர்வு ஏன் இவர்களுக்கில்லை.பொழுதைப் போக்க தொலைக் காட்சி இருக்கின்றது ஆனால் பொல்லாப்பு வரும் சூழலில் அல்லவா வசிக்கின்றார்கள்.ஆடம்பர வாழ்விற்குரிய அனைத்து வசதிகளுடனும் அசிங்கத்துள் வாழ்கின்றார்கள் இவர்கள்…