காலை வகுப்புக்கு வந்ததும் புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டுக்காக வெளியே செல்ல வேண்டி ஏற்பட்டது . அதற்காக முனியப்பர் கோவிலை தெரிவு செய்த நாம் யாழ்பாணம் முனியப்பர் வீதியின் ஊடாக கோட்டைக்கு செல்லும் எண்ணத்தோடு பயணித்த போது
அழகாக பூத்திருந்த தாமரைகள் நிறைந்த புல்லுக்குளம் என் கண்ணில் பட அதனை கமராவில் பதித்து விட்டு திரும்பிய போது
யாரென்றே தெரியாத ஒருவரின் சிலை மிக மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்பட்டது .அச் சிலை என் காமராவிட்குள்ளும் அகப்பட்டுக்கொண்டது.அச் சிலையின் தலை கூட இல்லை .
இதனால் அவர் யார் என்று அறிய முடியவில்லை .
நாம் படம் எடுப்பதை அவதானித்த ஒருவர் அச்சிலை தந்தை செல்வாவினுடையது என விளக்கமளித்தார் .
இதனால் அவர் யார் என்று அறிய முடியவில்லை .
நாம் படம் எடுப்பதை அவதானித்த ஒருவர் அச்சிலை தந்தை செல்வாவினுடையது என விளக்கமளித்தார் .
அப் புகைப்படத்துடன் திரும்பியபோது
முனியப்பர் கோவிலில் கால் பதித்த வேளை கம்பி வலைகளுக்கிடையில் தெரிந்த துரையப்பா விளையாட்டரங்கும் பதியப்படது.
ஆர்வத்துடன் படம் பிடித்துக்கொண்டிருந்த என் நண்பி திடீரென அலறினாள். என்ன நடந்ததோ என அருகில் சென்று பார்த்த போது அவள் பள்ளத்துள் வீழ்ந்ததால் அவளது பாதணி அறுந்தமை தெரிந்தது .அருகில் அங்காடி இருந்ததனால் உடனே புதியபாதணி வாங்கிகொள்ளமுடிந்தது .
கடையில் அழகாக அடுக்கப்பட்டிருந்த
பாதணிகளும் அறுந்த பாதணியும் என் கமராவுக்குள் அழகாக சிக்கி கொண்டது. கோட்டை நோக்கி சென்று அங்கு நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகளையும் அகழியையும் படமாக்கினேன். வரும் வழியில் கண்ட அச் சிலை இருந்த நிலை ஆயிரம் கதை சொல்லும் போது கோட்டையில் இடம்பெறும் புனரமைப்பு எனக்கு பெரிதாக தெரியாததால் கோட்டையில் ஒரு சில படங்களை மாத்திரம்
எடுத்து திரும்பினேன் .
எடுத்து திரும்பினேன் .
நல்ல ஓர் அனுபவம் பெற்றுள்ளீர்கள்.... அந்த செருப்பு அறுத்தவங்க புதுசா செருப்பு வாங்கினாங்களோ இல்லையோ கட்டாயம் வீட்டில வாங்கி இருப்பாங்க!!!!!!! lol.....
அன்பு நண்பன்
July 5, 2011 at 7:36 AMNICE ARTICAL.BEST WISHES THUVA
Anonymous
July 5, 2011 at 9:50 PMyah we have unforgatable experience anna
THUVARAA
July 6, 2011 at 12:20 AMThanks thadsa
THUVARAA
July 6, 2011 at 12:20 AMஅனுபவங்களை அற்புதமாக பகிர்ந்து உள்ளீர்கள்...
அன்பு நண்பன் டினு அண்ணாவின் கருத்தை Retweet செய்கின்றேன்...ஹா ஹா
ஷஹன்ஷா
July 6, 2011 at 6:12 PMThanks jena
THUVARAA
July 6, 2011 at 8:59 PM