தயாரிப்பு - ஐங்கரன்
இயக்கம் - வசந்தபாலன்
இசை - ஜி. வி பிரகாஷ்
அங்காடி தெரு எனும் இத் திரைப் படத்தில் ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்து தான் இயக்குனரின் பார்வை விரிந்து இருக்கிறது .
தொழிலாரின் துயரத்தை அழகாக எடுத்து சென்றிரூக்கிறார் இயக்குனர் வசந்தபாலன் .
கதாநாயகன் மகேஷ் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன், தந்தை விபத்தில் இறந்துபோக குடும்ப சூழ்நிலையால் வேறு வழியின்றி தன் நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுவதை பார்த்து கோவமடைகிறான் ஆனாலும் வேறு வழியின்றி அங்கேயே இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறான். இதற்கிடையில் நாயாகியின் அறிமுகம்.
இத் திரைப் படத்தில் நம்மை கண்ணீர் விட்டு அழ சில இடங்களில் அவகாசம் தருகின்றார். ஊழியர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது , அறைக்குள் குட்டிச் சென்று சித்ரவதை செய்வது அத்துடன் அவர்களுக்கான உணவு வழங்கும் முறை தொழிலாளர்கள் படும் வேதனையை உணர்த்தி நிற்கிறது .
நாயகன் மகேஷும் நாயகி அஞ்சலியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக தம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைசுவையில் கலக்கி இருக்கிறார் . நாயகன் நாயகி மட்டுமன்றி கதாபாத்திரம் அனைத்தும் தம் நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர் . நாயகியின் தங்கை நாய்க் கூண்டிட்குள் படுத்து உறங்குவதும் நாயகியை மனேஜர் பாலியல் கொடுமைப்படுத்துவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளன .
இத் திரைப்படத்தில் கிராமத்தில் இருந்து வரவழைக்கபடும் தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்றபடியே வேலை செய்கிறார்கள் .ஆனாலும் மதிய உணவுக்காக சென்றுவிட்டு வர தாமதமானால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் வெட்டப்படுகிறது . நாள்முழுக்க கஷ்டப்பட்டவர்கள் நிம்மதியாக நித்திரை செய்க்கூட இடமில்லாத நிலை எடுத்து காட்டப்பட்டுள்ளது . இந்த இன்னல்களின் மத்தியில் இருவரின் காதலும் வளர்கிறது . ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண்ட இருவரும் வெளியே அனுப்ப பட்டு விடுகின்றனர் . புதிய வாழ்வை ஆர்வத்துடன் எதிர் பார்த்து செல்லும் நேரத்தில் எதிர் பாரத விதமாக ஏற்பட்ட விபத்தில் கால்களை இழக்கிறாள் நாயகி இது மனதை உருக வைக்கிறது .
ஒரு கட்டத்தில் கண்முன்னே தன் காதலியை தன் கண் முன்னே துன்பப்படுத்துவதை பொறுக்காது ஆவேசப்பட்டு தாக்குவது அவனது துடிப்பை வெளிப்படுத்தி நிற்கிறது . முதலாளித்துவத்தின் அடக்கு முறையும் வயிற்று பிழைப்புக்காக அடங்கிப்போகும் ஊழியர்களது நிலையும் அழகாக எடுத்துகாட்டப்பட்டுள்ளது .
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ......" "மற்றும் உன் பேரை சொல்லும் போது......." எனும் பாடல்கள் படத்தோடு இணைந்ததாக அமைந்துள்ளது . காதல், பாசம் , ஊடல் , சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அனைத்தையும் ஒன்று திரட்டி அமைந்துள்ளது . இது போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு முன்னோடி. இப்படத்தை பற்றி நினைத்தால் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு ஆதங்கம் , உணர்வு நிச்சயம் தோன்றும் .