கலையை வென்ற நம் கலைஞர் சிறீதர்
பிச்சையப்பா அவர்களை காலம் வென்றுவிட்டது என்று தான் கூறவேண்டும். 47 வருடங்கள் மாத்திரமே இவ்வுலகில் வாழ முடிந்த அவரால் படைக்கப்பட்ட படைப்புக்கள் ஏராளம். இலங்கையின் பிரபல நாடகக் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் 2010ஆம் ஆண்டு பெப்ரவரி இருபதாம் திகதி இக்கலையுலகை கவலையில் ஆழ்த்தி விட்டு சென்றவர். 1963 ஆம் ஆண்டு ஜீலை மாதம் இருபதாம் திகதி நாடறிந்த நாடகக் கலைஞரான டி.வி பிச்சையப்பாவிற்கு மகனாக உதித்தவர் தான் சிறீதர் அவர்கள். கொழும்பு கதிரேசன் வீதியில் உள்ள இல்லத்தில் வாழ்ந்தவர். கொழும்பு விவேகானந்தர் கல்லூரியின் மாணவனும் கூட. சிறு வயது முதலே கலைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.ஆம் தனது ஒன்பது வயதிலேயே கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தொடங்கிவிட்டாராம் சிறீதர்
அவர்கள்.
ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கொண்டவரோ என்று அதிசயிக்கும் அளவிற்கு தன்னை கலையால் கட்டிக் கெகாண்டவர். இவர் நாடகக் கலைஞர் மட்டுமன்றி சிறந்த பிண்ணணிப்பாடகர் ,பாடலாசிரயர், இயக்குனர, எழுத்தாளர், மிமக்கிரி மற்றும் ஓவியர் என பல்கலைத்துறையிலும் ஈடுபட்டு கரைலத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பல்கலைத் தென்றல் சிறீதர்

ஆம் இத்தகைய கலைஞன் இன்று நம்மோடு இல்லை என்பது கவலைக்குரியதே. ஆவர் எம்மை விட்டுப் போனாலும் அவரது கலைப்படைப்புக்கள் எம்மோடு கதை பேசிக் கொண்டு தான் இருக்கின்றன.
சுpறந்த நாடகக் கலைஞரான சிறீதர்
அவர்கள் இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சி மூலம் சிறுவர் நாடகங்களில் பிரபல்யமானார்.பின்னர் பாடகராகக் கலையுலகினுள் பிரவேசித்தார். தொலைக்காட்சிகளில் ஐம்பதிற்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றார். 2002 ஆம் ஆண்டு சூரியன் எப்.எம் இல் “பாபா பூம்பா” இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது மட்டுமன்றி சக்தி எப்.எம் இல் பாடிக்கேட்ட பாடல் என்ற நிகழச்சியை ஞானகி என்பவருடன் சேர்ந்து சுவாரஸ்யமாக வழங்கியிருந்தாராம்.
இலங்கையின் ஈழத்தவர் கலையம்சத்தை தென்னிந்திய கலைத்துறையுடன் ஒப்பிடடுக் கூறுமளவிற்கு தொண்ணூறுகளில் தென்னிந்திய திரையுலகின் பிண்ணணியில் ஈழத்துப் பாடல்கள் பலவற்றை பாடியிருக்கின்றார்.
ஸ்ரீதர் அவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை மொழி பெயர்த்து வழங்கி வந்துள்ளார். சுpங்களத் தொலைக் காட்சி நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்து வழங்கியிருக்கின்றார். “உன்னைப் போல் ஒருவன்” என்ற நாடகத்தில் பங்கேற்று புகழைத் தேடிக் கொண்டவர். எஸ்..ராமதாஸ், எஸ். செல்வசேகரன், கே.ஏ ஜவகர் , ஜெய்ரகிம், சஹீட் , ராஜாகணேஸன், நடராஜா சிவம் , கே.எஸ் பாலச்சந்திரன் , கமலினி , ஜெயஜோதி , மணிமேகலை போன்ற பலரோடும் சிங்களக் கலைஞர்களுடனும் இணைந்து நடித்து பெருமை கண்டவர்.
1974 கே. செல்வராஜ்ஜின் கதை வசனத்தில் உருவான “உறவுகள்”மேடை நாடகத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் உறவுகளை வளர்க்கத் தொடங்கினார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய்” என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் நாடக உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை சிறீதர்
பதித்துக் கொண்டார்.
ரூபவாஹினி ஒளிபரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியான 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். “சமூகசேவகி”, “எதிர்பாராதது” போன்றவை அவர் நடித்த தொலைக்காட்சி நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை.
எஸ். ராமதாஸ் , மஹதி ஹசன் , இப்ராஹிம் போன்றோர் எழுதிய வானொலி பிரதிகளில் மிக அதிகமான நாடகங்களை நடித்துள்ளார். ஈழத்து நாடக உலகில் நடிகவேள் லடிஸ் வீரமணி என்ற கலைஞனது முடிவு எப்படி இருந்ததோ அதே நிலைக்கு சிறீதர்
தள்ளப்பட்டது தவிர்க்க முடியாததொன்றாக அமைந்துவிட்டது.
ஸ்ரீதர் அவர்களிடம் காணப்பட்ட மற்றுமொரு படைப்பாற்றல் நவீன ஓவியங்கள் வரைவது. ஆம் இவரை நவீன ஓவியத்தின் முன்னோடி என்றே குறிப்பிடலாம். தினகரன் வாரமஞ்சரி சிறுகதைகள் , தொடர்கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்திருக்கின்றார். மல்லிகை போன்ற இலக்கிய ஏடுகளும் மித்திரன் வாரமலரின் கலாவனம் பகுதியும் ஸ்ரீதரின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. இவரின் ஓவியப்படைப்பக்கள் மட்டுமன்றி பல கலைப்படைப்புக்கள் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டப் படாமலேயே கடைசி வரை இருந்துவிட்டமை வேதனைக்குரியதே.
மேலும் “மாமியார் வீடு “ “ரத்தத்தின் ரத்தமே” திரைப்படம் தொட்டு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிற்கும் அவரது பங்களிப்புக்கள் இருந்துள்ளன. சிறீதர்

அவர்கள் இறுதியாக பங்கெடுத்த வானொலி நாடகம் வந்தியதேவன் சரித்திரத் தொடர். சக்தி எப்.எம் வானொலி தயாரித்து வழங்கிய இத் தொடரில் தான் சிறீதர்
அவர்கள் இறுதியாக பங்கெடுத்துள்ளார். சக்தி எப்.எம் இவர் நினைவாக நிகழ்ச்சியினையும் ஒலிபரப்பியிருற்தனர்.
புல நாடகங்களில் ரசிகர்களை சிர்க்கவைத்த இவர் தனது வாழ்வில் சிரித்து மகிழ்ந்தது குறைவென்று அறியமுடிந்தது.
சிறீதர்
அவர்கள் கவிஞனாகவும் பரிணமித்தள்ளார். தமிழுக்காகவும் தனக்காகவும் எதிர் காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு இறுவட்டு ஒரு தெரலைக்காட்சி நாடகம் தனது பெயரில் வெளியிட வேண்டும் என்பதே இவரது இறுதி ஆவலாக இருந்தது.
இத்தகைய கலைஞன் வெகு விரைவில் நம்மை விட்டு நீங்கி விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றும் ஸ்ரீதர் அவர்கள் எம் மத்தியில் இருந்திரந்தால் ஏhளமான படைப்புக்களை கொடுத்திருப்பார். இக்கலைஞன் எம்மை விட்டு நீங்கிய பின்பு தான் அவரது கலைப்படைப்பக்களின் பெறுமதியும் நம் கலைத்துறைக்கு தெரிய வந்துள்ளது.
கலைத்திறமைகளை கால்களாய்க் கொண்டு கலைத் தளத்தில் நடமாடி நின்று பலரை சிர்க்கவும் சிந்திக்கவும் வைத்து இலக்கிய இதயங்களையும் கலாரசிகர்களையும் கண்ணீக்குள் விட்டுச் சென்றாலும் கலைப்பணியைத் தலைப்பணியாய்க் கொண்டதன் மூலம் காலத்தால் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஸ்ரீதர்.
எம்மவர்கள்; பலர் பல்வேறு கலைத்திறமை மிக்கவர்களாhக நம் மத்தியில் இருந்துள்ளார்கள். இருக்கின்றனனர். இவர்களது படைப்பாற்றல் வெளியுலகிற்கு கொண்டு வரப்படவேண்டும். எத்தனை ஊடகங்கள் இருந்தும் அவர்களது படைப்புக்கள் வெளிப்படுத்தப் படாமலே மழுங்கிப் போய் விடுகின்றன. இதற்கு சிறீதர்
பிச்சையப்பமடடும் விதி விலக்கல்ல.
சில ஊடகங்கள் தற்போது இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது பாராட்டுக்குரியதே. நம் நாட்டு கலைஞர்களது முயற்சிக்கு ஊக்கமளித்து இவர்களது திறமைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். உயிரோடு இருக்கும் போதே கலைஞனது கலைப்படைப்புக்கள் பற்றி பேசி அவனது படைப்புக்களிற்கு ஊக்கமளிப்போம்;.
இப் பதிவினை மேற் கொள்ள உதவிய இணைய நண்பர்களிற்கும் மற்றையவர்களிற்கும் நன்றிகள்.