இத்திரைப்படம் இக்ளு என்கிற பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இன மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுகிறது. அவர்களினுடைய நாளாந் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழங்கள் வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
படத்தில் பேச்சுக்கள் இன்றி வெறும் சைகைகளே மடடுமே காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளன.
நாநோக் என்பவருடைய குடும்பம் உணவினைத் தேடி பனிப்பாறைகளினூடாக ஒரு கடற்கரையை நோக்கிச் செல்கின்றது. அவர்கள் பனிப்பறைகளினூடாகச் செல்வதற்கு பாதுகாப்பாக நாய் உதவுகின்றது. இவர்கள் உணவினைத்தேடி பல இடங்கள் அலைகிறார்கள்.
கடலில் இருந்து பெறப்பட்ட மீன்களையும், பனிக்கரடிகளையும், கீரிகளையும் உணவாக உட்கொண்டனர் பனிக்கட்டிகளை நெருப்பினால் உருக்கி நீராகவும் பருகுகிறார்கள். தம் உணவினை பச்சையாகவே உண்ணுகின்றனர். இன்றைக்கும் இப்படியான மனிதர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
சில சமயங்களில் நாய்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுகின்றது இதனை தனித்து நின்று சமாளிப்பவனாகவும் தனது குடும்பத்தை தனித்துநின்று காப்பாற்றுபவனாகவும் நானோக் இருக்கிறான் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவுத்தட்டு;ப்பாட்டினால் ஏற்படும் ஒரு சீனக்குடிமக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றது.
உலகின் முதலாவது ஆவணப்படம் என்பதை அழுத்திக் கூறியிருக்கலாம்.
Anonymous
July 6, 2011 at 7:08 PMதவறுகளை இனிவரும் பதிவுகளில் திருத்துகிறேன் nanry
THUVARAA
November 11, 2011 at 10:50 PM